கமலுக்கு ஸ்டாலின் ஆதரவு, ஸ்டாலினுக்கு கமல் நன்றி

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரிலும் பேட்டியிலும் அவ்வப்போது ஆளும் அதிமுக அரசை விமர்சனம் செய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர்களிடம் இருந்து கமல்ஹாசனுக்கு மிரட்டல் வந்து கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களின் மனநிலையை பிரதிபலிப்பாக கூறி வரும் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது ஜனநாயகம் அல்ல என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஸ்டாலினின் இந்த அறிக்கைக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் ’அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *