கவுதமிக்கு இன்னும் சம்பள பாக்கியா? கமல் பதில்

கமல்ஹாசன் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக நடிகை கவுதமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகார் கூறிய நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கம் அளித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கவுதமி வெளியிட்டிருந்த ஒரு டுவிட்டில், “கமலுடன் இணைந்திருந்த காலத்தில், அவர் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் படங்களுக்கான ஆடை வடிவமைப்புக்கான பணியாற்றினேன். அந்த படங்களுக்கு பணியாற்றியதற்காக அவரோ அல்லது, ராஜ்கமல் நிறுவனமோ பணம் கொடுக்கவில்லை. பல முறை இது தொடர்பாக கமலிடமும், ராஜ் கமல் நிறுவனத்திடமும் பணம் பெற முயற்சித்தேன். ஆனால் இன்னும் சம்பள பாக்கி வரவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து டெல்லியில் கமல் பேசும் செய்தியாளர்களிடம் பேசும் போது கேள்வி கேட்டனர். அதற்கு, “கவுதமிக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி கொடுத்து விட்டோம். அவருக்கு சம்பளம் வழங்கவில்லை என தெரிவித்தாரே தவிர, வழங்கிய பின் வழங்கிவிட்டதாக கூறவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *