shadow

kamalகடந்த ஜனவரி மாதம் முதல் சமையல் காஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு மானியத்தொகையை அவர்களுடைய வங்கிக்கணக்கில் சேர்த்து விடும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான போலி சிலிண்டர் வாடிக்கையாளர்களை அரசு அடையாளம் கண்டதோடு, மானியமும் நேரடியாக நுகர்வோருக்கு சென்றடைந்தது.

இந்நிலையில் இந்த மானியத்தொகையை பெற விரும்பாதவர்கள்  காஸ் ஏஜென்சிக்கு சென்று, ‘மானிய சிலிண்டர் வேண்டாம்’ என்பதற்காக உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு சந்தை விலையில், சிலிண்டர் வழங்கப்படும். அதற்கான மானியம், வங்கியில் செலுத்தப்படாது.

இந்தியாவில், 1.02 லட்சம் பேர்களும் தமிழகத்தில், 10,412 பேர்களும் ‘மானிய சிலிண்டர் வேண்டாம்’ என்று எழுதி கொடுத்துள்ளனர். இவர்களில் நடிகர்கள் கமல்ஹாசன், பிரசாந்த்;திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம், இயக்குனர் சங்கர், திரைப்பட பின்னணி பாடகர் ஜேசுதாஸ் மற்றும் தொழிலதிபர்கள் உள்பட பலர் மானிய கேஸ் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால்  திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலர், இன்னமும் மானிய சிலிண்டர் தான் வாங்கி வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. வசதி படைத்தவர்கள் மானிய அல்லாத சிலிண்டர் திட்டத்தில் இணைவதன் மூலம், அந்த நிதியை பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply