shadow

மீனவர்கள் பிரச்சனையை தீர்க்கும் வாய்ப்பை எனக்கு தாருங்கள்: கமல்ஹாசன்

நடிகர் கமலஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

பின்னர் காலை 9.30 மணியளவில் ராமேஸ்வரம் மீனவர்களைச் சந்தித்த நடிகர் கமல், மீனவப் பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் மீனவர்களிடையே பேசிய கமல், ‘ தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் மீன்பிடி தொழில். மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். பத்திரிகை வாயிலாக மீனவர்களின் நிலைமையை அறிவதை விட நேரடியாக மீனவர்களிடம் இருந்து அறிய விரும்பியதால் உங்களை இன்று நேரில் சந்திக்கின்றேன்

மாறி மாறி வரும் தமிழக அரசுகள் வாக்குறுதிகளை தருகிறதே தவிர, நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மீனவ பிரச்னைகளை தீர்க்கும் வாய்ப்பை எனக்கு தர வேண்டும்’ என்று அவர் மீனவ்ர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply