shadow

கமல்ஹாசனிடம் பாராட்டு பெற்ற பிரபல டாக்டர்
bharaath
கமல்ஹாசன் நடித்த ‘உன்னை போல் ஒருவன்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராமனின் சக அதிகாரியாக நடித்திருந்தவர் டாக்டர் பரத் என்பவர். இவர் தொழில்முறையில் டாக்டராக இருந்தாலும் நடிப்பின்மீது இருந்த ஆர்வதால் திரையுலகிலும் ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து முடித்துள்ள ‘பயமே ஒரு பயணம் என்ற படத்தின் பர்ஸ்ட்லுக் ஸ்டில் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் நட்பின் அடிப்படையில் கமல் கலந்து கொண்டு டாக்டர் பரத்துக்கு வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் கமல் பேசியபோது, “டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர். ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது. ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்திருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார். அவர் நடித்துள்ள ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தின் ஒரு சில காட்சிகளை சமீபத்தில் பார்த்தேன். அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப்படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘பயம் ஒரு பயணம்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்தினார்

இந்த படத்தில் டாக்டர் பரத்துடன் விசாகாசிங், மீனாக்ஷி தீட்சித், ஊர்வசி மற்றும் சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கியுள்ளார்.

Leave a Reply