கமல்ஹாசன் கட்டி முடித்த புதிய வீடு மற்றும் ஸ்டுடியோ

கமல்ஹாசன் தற்போது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். அங்குதான் அவரது அலுவலகமும் உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது புதிய வீடு மற்றும் புரடொக்ஷன்ஸ் ஸ்டுடியோ ஒன்றை பலகோடி மதிப்பில் கட்டி வருவதாகவும், அதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடு மற்றும் ஸ்டுடியோ குறித்து கமல் கூறுகையில் புதிய வீட்டில் அனைத்து வசதிகளும் இருக்கும் என்பதால் ஆண்டுக்கு 600 மணி நேரம் மிச்சமாகும் என்றும், அந்த நேரத்தை பயனுள்ள வழியில் கழிக்க முற்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் இம்மாதம் 8ஆம் தேதி கமல் வீட்டில் நடந்த தீவிபத்து சம்பவத்தில் அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த பல அரிய நூல்கள் தீக்கிரையாகிவிட்டதாகவும், அந்த நூல்களில் சுஜாதா உள்ளிட்ட பல மிகச்சிறந்த எழுத்தாளர்களின் கையெழுத்துக்கள் இடம் பெற்றிருந்ததாகவும், இனி அவற்றை பணம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *