shadow

thalaivanஉலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ‘தூங்காவனம்’ படத்தின் பணிகளில் விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சயீத் அலிகான் முக்கிய வேடத்தில் நடிக்கும் அரசியல் த்ரில் படமான ‘அமர் ஹை’ படம் முதலில் இந்தியில் மட்டும் தயாராவதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது இந்த படம் தமிழிலும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் சயீத் அலிகான் நடிக்கும் முக்கிய வேடத்தில் தமிழின் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பார் என்றும், அதுமட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் தூங்காவனம்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என்ற இரண்டு மொழி படங்களின் படப்பிடிப்பும் நடத்தப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply