விழுப்புரம் தாக்குதல் குறித்து வாயை திறந்த கமல்

விழுப்புரத்தில் நடந்த தாய், மகன் தாக்குதல் மற்றும் மகள் அவன்புணர்வு குறித்து நடிகர் பிரசன்னா உள்பட பலர் கருத்து தெரிவித்துவிட்ட நிலையில் கமல், ரஜினி இன்னும் கருத்து சொல்லவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த கமல் விழுப்புரத்தில் நடந்த தாக்குதல் சட்டம், ஒழுங்கு சீர்குலைவை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவை அடுத்து, கமல் ஹாசன் மும்பை சென்று அவருடைய மகள் ஜானவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். இதையடுத்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மிகவும் வருத்தமான ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்கொடுமை மற்றும் சிறுவன் கொலை வேதனையளிப்பதாகவும், இது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவை காட்டுகிறது என்றும் கூறினார்.

சண்டிகர் தமிழக மாணவர் தற்கொலை குறித்த கேள்விக்கு, மாணவர்கள் தற்கொலை செய்யக் கூடாது என்றும், எங்கு படித்தாலும் மாணவர்கள் பாதுகாப்பாக இருந்தால் அதுவே நல்ல நாடு என்றும் கமல் ஹாசன் தெரிவித்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *