shadow

rajini and kamalசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை வெகுசிறப்புடன் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மட்டும் வித்தியாசமாக ரஜினிக்கு தனது 44வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று 20 வருடங்கள் குறைத்து கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ரஜினியின் வயது அல்ல என்றும், ரஜினிக்கும் தனக்கும் நட்பு ஏற்பட்ட வருடங்களின் எண்ணிக்கை என்று விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் கமல்ஹாசன், தன் உயிர் நண்பருக்கு யூடியூப் இணையதளம் மூலம் தனது வாழ்த்து செய்தியை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். நமது சென்னை டுடே வாசகர்களுக்காக அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1yFZSsM” standard=”//www.youtube.com/v/aQXNiISGNvc?fs=1″ vars=”ytid=aQXNiISGNvc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1277″ /]

Leave a Reply