Tamil_News_large_1403164

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் குறித்து நடிகர் கமலஹாசன் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டிக்கு, தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல் பொறுப்பில்லாமல் பேசுவதாக கூறியுள்ளார். இது குறித்து வாசகர்களே உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் உணவின்றி தவித்தனர். பலர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்தச்சூழல் சென்னை மழை வெள்ளம் பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலையுடனும், சற்று காட்டமாகவும் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…: மழையால் ஒட்டுமொத்த சென்னையும் நிலை குலைந்து போய் உள்ளது. சென்னையில் மழை நின்றாலும் இதிலிருந்து மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, உழைத்து சம்பாதித்த பணத்திற்கு முறைப்படி வரி செலுத்தி வருகிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது வரிப்பணங்கள் எதுவும் உரியவர்களுக்கு போய் சேரவில்லை என்று தெரிகிறது. தமிழக அரசு செயலிழந்துவிட்டது. மழை போன்ற இயற்கை பேரழிவுகள் வந்தால் உடனே எங்களை போன்றவர்களிடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்கிறது அரசு. அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகத்தான் சம்பாதிக்கிறேன். நான் சம்பாதிப்பது குறைவு தான் என்றாலும் கொடுக்க வேண்டியது என் கடமை என்பது எனக்கும் தெரியும். கண்டிப்பாக நான் உதவி செய்வேன். ஆனால் இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரர்களின் பணம் அல்ல, உண்மையிலேயே மக்கள் நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை, பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், எவுளுஅளுமுஅ விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.கமல்ஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் அரசு நிர்வாகம் செயலற்று போனதாக கமல்ஹாசன் தெரிவித்திருப்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல். இத்தகைய பேரிடர் தருணங்களில் பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப் பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா? தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் தமிழக அரசு, கமலஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே என்று அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *