shadow

வெற்றிமாறனின் “விசாரணை”க்கு கிடைத்த மிகப்பெரிய விருது

visaranaiதனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் உலக அளவில் பல விருதுகளை வென்றதுபோலவே மீண்டும் இதே கூட்டணி தயாரித்துள்ள ‘விசாரணை’ திரைப்படத்திற்கும் பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் நேற்று உலக நாயகன் கமல்ஹாசனுக்காக சிறப்பு காட்சி ஒன்று சென்னையில் திரையிடப்பட்டது.

இந்த படத்தை பார்த்த கமல்ஹாசன் வெற்றிமாறனை பாராட்டியதோடு, தன்னுடைய டுவிட்டரில் படம் குறித்த தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில், “நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறனின் மனதில் பதித்துச்சென்ற என் பாலுமஹேந்திராவிற்கு நன்றி. நேற்று விசாரணை படம் பார்த்து வியந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த பாராட்டே தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அட்டக்கத்தி தினேஷ், கயல் ஆனந்தி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரஜினியின் ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடவுள்ளது. இந்த படத்திற்கு ‘UA’ சர்டிபிகேட் கிடைத்திருப்பதால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது. எனினும் ரசிகர்களின் மனதில் இந்த படத்திற்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply