shadow

முதல் முறையாக கமலஹாசனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கவிருக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை கமல், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

முதல் முறையாக கமல்ஹாசனுடன் சிவகார்த்திகேயன் இணைவதை அடுத்து இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது