shadow

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் ‘கமல்ஹாசன் – மோகன்லால்

பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தி வெட்னஸ்டே’ என்ற படத்தின் ரீமேக் படமான ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் கமல்ஹாசனும் மோகன்லாலும் இணைந்து நடித்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

இந்த நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் கமல்ஹாசனும் மோகன்லாலும் நடிக்கவுள்ளனர். அக்சயகுமார் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் ‘ஓ மை காட்’. இந்த படத்தின் ரீமேக் படத்தில் கமல்ஹாசனும் மோகன்லாலும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த தனது அடுத்த படத்தின் டைட்டிலான ‘தலைவன் இருக்கின்றான்’ படம் இந்த ரீமேக் படம்தன் என்றும் இதுகுறித்த அதிகார்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply