shadow

சீவலப்பேரி 2′ படத்தில் கமல்-கவுதம் மேனன் இணைவார்களா?
kamal
கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த ‘சீவலப்பேரி பாண்டி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது. நெல்லை தமிழில் வசனம் பேசி நடித்த நெப்போலியனுக்கு அந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுத்தது. பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தை தற்போது இரண்டாம் பாகம் தயாரிக்க, முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் பி.ஜி.ஸ்ரீகாந்த் முன்வந்துள்ளார்.

தற்போது  பில்லா 2, சிங்கம் 2, காஞ்சனா 2, கோ 2, பாகுபலி 2, எந்திரன் 2 என இரண்டாம் பாகங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றியும் பெற்று வருவதால் ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் தயாரிப்பாளர் கருதுவதாகவும் இதுகுறித்து கமல்ஹாசனிடம் விரைவில் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு’ படத்திற்கு பின்னர் மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவுதம் மேனன் விரும்பியதாக செய்தி வெளிவந்தது. இந்த படத்தின் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் கவுதம் மேனனின் விருப்பம் பூர்த்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply