shadow

310335_178119018933220_506450448_nஒரு கைப்பிடி மண்ணை கல்கத்தாவிலிருந்து (1915ல்) கொண்டுவந்தார்கள். ரேணுகாதேவிபோல, மார்பளவு காளி சிலை (கருங்கல்லில்) வைத்து சிறுகோயிலைக் கட்டினார்கள். பின்னர் கருவறை மண்டபம், விமானம் கட்டப்பட்டது. கிழக்கு பார்த்த சந்நதி. தட்சிணாமூர்த்தி, துர்க்கை, காசி விசுவநாதர், விசாலாட்சி, ஆலமர கிருஷ்ணர், கருப்பண்ணசாமி, கல்யாண கணபதி என அனைத்துச் சந்நதிகளும் உள்ளன. பவுர்ணமியிலும் வெள்ளி, செவ்வாய் மற்றும் கார்த்திகை நட்சத்திர நாளிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அரச-வேம்பு மரங்களுடன் சேர்ந்த பெரிய புற்றும் உள்ளது. இங்கு வந்து வணங்குபவர்களுக்கு உத்தியோகம், உத்யோக உயர்வு அருள்கிறது. விளையாட்டு வீரர்கள் மாநில அளவில் தேர்வு பெறுகிறார்கள். கன்னியருக்கு திருமணம் கைகூடுகிறது.  குழந்தை இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டுகிறது. நோயுற்றவர்கள் உடல்நலம் பெறுகிறார்கள். ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மனுக்கு இங்கிருந்து வண்டிமூலம் பூக்கொண்டு போய் பூச்சொரியல் நடத்துகிறார்கள். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பெருந்திருவிழா நடைபெறுகிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 – 12 மணி, மாலை 4 – 8 மணி.

திருச்சி-மதுரை சாலையில் காவல்துறை சிறப்புப் படை அலுவலகத்தில் மூன்றாவது வாசலில் உள்ளது. இதனைப் பொதுமக்களும் சென்று வணங்கலாம்.

Leave a Reply