காலா’ படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்த தயாரிப்பாளர் சங்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த படம் சென்சாருக்கு செல்ல தயாரிப்பாளர் சங்கம் தடையில்லா சான்றிதழ் கொடுக்க மறுத்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் தடையில்லா சான்றிதழ் இருந்தால்தான் சென்சார் போர்டு, படத்தை தணிக்கை செய்யும். ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் காலா உள்பட எந்த படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடையில்லா சான்றிதழ் கொடுக்கவில்லை.

எனவே திட்டமிட்டபடி ‘காலா’ வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *