kaaki sattaiஎதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ஆகிய ஹாட்ரிக் வெற்றிகளை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

கடந்த பொங்கல் தினமே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த திரைப்படம் ‘ஐ’, ஆம்பள, மற்றும் ‘டார்லிங்’ ஆகிய திரைப்படங்கள் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’, 6ஆம் தேதி அமிதாப் மற்றும் தனுஷின் ‘ஷமிதாப்’, 13ஆம் தேதி ‘அனேகன்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால், சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா,பிரபு, மனோபாலா, வித்யூலேகா ராமன், இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *