காஜல் அகர்வாலை பாடகியாக்கிய பிரபல இயக்குனர்

kajal agarwalதமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் முதன்முதலாக ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. காஜல் அகர்வால் தான் நடிக்கும் படங்களில் டப்பிங் கூட பேசாத நிலையில் கன்னட மொழியில் அவரை பாட வைத்து சாதனை செய்துள்ளார் இயக்குனர் எம்.சரவணன்.

‘எங்கேயும் எப்போதும்’, இவன் வேற மாதிரி’, ‘வலியவன் ஆகிய தமிழ் படங்களை இயக்கிய எம்.சரவணன் தற்போது புனித் ராஜ்குமார் நடிக்கும் கன்னட படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு மெலடி பாடலை காஜல் அகர்வால் பாடியுள்ளார்.

ஹீரோயின் பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடல் படத்தின் வெற்றிக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் கம்போஸ் செய்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *