ரகுல் ப்ரித்திசிங்கிற்காக விட்டுக்கொடுத்த காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் காஜல் அகர்வால், சமீபத்தில் ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் நானி, நாகர்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால் படக்குழுவினர் கேட்ட கால்ஷீட் தேதிகளை அவர் கொடுக்க முடியாததால், அந்த படத்தில் இருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டது
இந்த நிலையில் அவரே ரகுல் ப்ரித்திசிங்கிடம் பேசி, இந்த படத்தில் தனக்கு பதிலாக நீங்களே நடியுங்கள் என்று கூறி அவரை சம்மதிக்கவும் வைத்து படக்குழுவினர்களிடம் அழைத்து சென்றாராம். காஜலின் இந்த செய்கையை தெலுங்கு திரையுலகம் புகழ்ந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.