shadow

அஜித்-விஜய் குறித்து காஜல் அகர்வால் கூறிய ஆச்சரியமான விஷயம்

பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒரே நேரத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இருவருடனும் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

அஜித்துடன் நடிக்கும்போது மிகவும் செளகரியமாக இருப்பதாகவும், அஜித்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருப்பதாகவும் கூறிய காஜல் அகர்வால், அஜித் திறமையின் ஒட்டுமொத்த வடிவம் என்று கூறியுள்ளார்.

அதேபோல் விஜய்யுடன் நடித்து வரும் ‘விஜய் 61’ படம் குறித்து கூறிய காஜல் அகர்வால், நானும் விஜய்யும் ஒரே இடத்தில் வேலை செய்யும் கேரக்டர்களாக நடித்துள்ளதாகவும், இருவரும் வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும்போது போது ஏற்படும் திருப்பம்தான் கதையின் மையப்புள்ளி என்றும் கூறியுள்ளார்.

அஜித், விஜய் குறித்து காஜல் கூறிய இந்த கருத்தை இருதரப்பு ரசிகர்களும் மிக வேகமாக பகிர்ந்து வருவதால் டுவிட்டரில் காஜல் அகர்வால் டிரெண்டுக்கு வந்துள்ளார்.

Leave a Reply