shadow

அஜித்துடன் 20 நாள் படப்பிடிப்பில் காஜல் அகர்வால்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்தவாரம் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக காஜல் அகர்வால் பல்கேரியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித்தின் மனைவியாக நடிக்கும் காஜல் அகர்வால் பல்கேரியாவில் அஜித்துடன் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அத்துடன் இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இதற்காக நாளை அல்லது நாளை மறுநாள் இந்தியாவில் இருந்து காஜல் அகர்வால் பல்கேரியாவுக்கு கிளம்பி செல்வார் என தெரிகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *