shadow

நயன்தாரா, த்ரிஷா பாணியில் காஜல் அகர்வால்

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பட்டியலில் தற்போது காஜல் அகர்வாலும் இணைந்துள்ளார்

பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கவுள்ள அடுத்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு த்ரில்லர் படம். இந்த படம் நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை போல் இருக்குமாம். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் வெற்றி பெற்றால் இனிமேல் காஜல் அகர்வாலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply