shadow

noble prize2014ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி பாகிஸ்தானின் கல்வியாளர் மலாலாவுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்லது.

நோபல் பரிசு கிடைத்தது குறித்து தற்போது டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்திக் கூறியபோது  “இந்த நவீன யுகத்திலும் துயரப்பட்டு வரும் லட்சக்கணக்கான குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்ட நோபல் பரிசு கமிட்டிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த பரிசு குறித்து கருத்து கூறிய மலாலா, “இந்த சிறிய வயதில் நோபல் பரிசு கிடைத்ததில் மிகவும் பெருமை அடைகிறேன். இதுவரை டாக்டராக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் இந்த பரிசு கிடைத்தவுடன் அரசியல்வாதியாகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மலாலா, அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்தில் இருந்தவாறே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில் வாழும் பெண்குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார். தற்போது இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகரில் வசித்து வருகிறார்.

Leave a Reply