9

தமிழ் சினிமாவில் 1950 மற்றும் 1960களில் சீரியஸான சினிமாக்கள் மட்டும் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் புதிய முயற்சியாக முற்றிலும் நகைச்சுவை ததும்பிய ஒரு திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் ‘காதலிக்க நேரமில்லை’. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் முத்துராமன், ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு , நாகேஷ், டி.எஸ்.பாலையா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் 1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகியது. சரியாக 50 ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் இந்த படத்தில் நடித்த காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு மற்றும் இந்த படத்தின் கதையாசிரியர் சித்ராலயா கோபு ஆகியோர் சமீபத்தில் சந்தித்து தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த படத்தில் கதாநாயகர்களாக நடித்த முத்துராமன், மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் காலமாகிவிட்ட நிலையில் மூன்று ஹீரோயின்கள் மட்டும் கலந்துகொண்டு காதலிக்க நேரமில்லை படம் குறித்த தங்கள் அனுபவங்களை பத்திரிகையாளர்கள் முன் தெரிவித்தனர். இந்த சந்திப்பு அடையாறில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவில் நடந்தது.

இந்த படத்தை மாபெரும் லட்சிய இயக்குனர் ஸ்ரீதர் இயக்கியிருந்தார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1fgURI8″ standard=”//www.youtube.com/v/1mGXyXy5e_Y?fs=1″ vars=”ytid=1mGXyXy5e_Y&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6626″ /]

Leave a Reply