shadow

கடவுள் இருக்குறான் குமாரு’ ரிலீஸ் எப்போது?

kik2எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்த ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தை ரிலீஸ் செய்ய இருந்த தடை நீதிமன்றம் மூலம் விலகிவிட்டாலும் மோடியின் அதிரடி அறிவிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரிலீசுக்கு முந்தைய நாள் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பணம் செட்டில் செய்ய வேண்டிய நிலையில் திடீரென ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு, வங்கி விடுமுறையும் வந்துவிட்டதால் செட்டில்மெண்ட் முடியவில்லை

எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 17க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் டி.சிவா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே தேதியில்தான் விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply