shadow

shadow

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டத்தை ராமேஸ்வர மீனவர்கள் இன்று திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனின் உறுதிமொழியை ஏற்று தங்கள் போரட்ட்த்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர்கள் அறிவித்துளனர்.

தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களது உடைமைகளை சேதப்படுத்திவரும் சிங்கள கடற்படையினர்களை கண்டித்து இன்று மீனவர்கள் அனைவரும் கச்சத்தீவுக்குள் தஞ்சம் போராட்டத்தை நடத்தவிருப்பதாக  ஏற்கனவே அறிவித்திருந்தனர். கச்சத்தீவுக்குள் நுழைய முயன்றால் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இலங்கை அரசின் எச்சரிக்கையை மீறி ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியில் இன்று காலை நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கச்சத்தீவுக்குள் தஞ்சம் புகும் போராட்டத்தில் கலந்துகொள்ள குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மீன்பிடி சார்பு தொழில்களை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

இன்று காலை 11 மணியளவில் கச்சத்தீவை நோக்கி ஊர்வலமாக படகுகளில் செல்ல தயாராக இருந்த நேரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீனவர் சங்க தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இன்னும் 10 தினங்களுக்குள் இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களையும், இலங்கையின் பிடியில் இருக்கும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதுவரை மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டு கொண்டார்.

மத்திய அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மீனவர்களின் தலைவர் ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்தார்.

Leave a Reply