shadow

‘கபாலி’ டீசர் ரிலீஸ் தேதி
kabali  6சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முக்கிய நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.

கபாலி படத்தின் டீசர் வரும் மே மாதம் 1ஆம் தேதி யூடியூபிலும் மே மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளிலும் வெளிவரும் என கூறப்படுகின்றது. மே 6ஆம் தேதி சூர்யாவின் ’24’ படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் ‘கபாலி’ டீசரை வெளியிட தாணு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ‘கபாலி டீசர் வெளியாகும் மே 1ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும்படி செய்திகள் வெளிவந்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply