shadow

19 மில்லியனை தொட்டது ரஜினியின் ‘கபாலி’

kabali-teaser-release-date-rajin-1024x576சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்தின் டீசர் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பல்வேறு சாதனைகள் செய்ததை பார்த்து வந்தோம்.

இந்நிலையில் தற்போது இந்த டிசர் 19 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய திரையுலகில் இதுவரை எந்த டீசரும் 19 மில்லியன் என்ற நிலையை எட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வரும் ஜூன் மாதம் வெளிவரவுள்ளது. பாடல்களுடன் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகும் என்றும், அந்த டிரைலரும் இதே போன்ற சாதனையை படைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

Leave a Reply