shadow

‘தெறி’ இடைவேளையில் ‘கபாலி’ டீசர். தாணுவின் அதிரடி திட்டம்

kabali theriஇளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த நேரமும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளிவர வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இடைவேளையில் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் டீசரை வெளியிட இந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளிவந்த ”கணிதன்’ திரைப்படத்தின் இடைவேளையின்போது ‘தெறி’ படத்தின் டீசர் திரையிடப்பட்டு மாபெரும் பரபரப்பை ஏற்படுத்திய தாணு, தற்போது மீண்டும் ஒருமுறை அதேபோன்ற பரபரப்பை ஏற்படுத்தவுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருதரப்பு ரசிகர்களையும் தியேட்டருக்கு வரவழைக்கும் வியாபார தந்திரமாகவும் அவர் இதை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளிவந்த கபாலி’ படத்தின் போஸ்டரே சமூக இணையதளங்களை கலங்கடித்தது. இந்நிலையில் டீசர் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு ‘தெறி’ படத்துடன் டீசர் வெளியானால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply