shadow

கிரெடிட் கார்டில் ‘கபாலி’. சிட்டி வங்கியின் புதிய திட்டம்

kabaliசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு புரமோஷனே தேவையில்லை என்றாலும் புரமோஷன் செய்வதில் மன்னன் என்று பெயர் பெற்ற கலைப்புலி எஸ்.தாணு இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான புரமோஷன்களை இந்த படத்திற்காக செய்து வருகிறார்.

உலகிலேயே ஒரு திரைப்படத்தின் புரமோஷன் விமானத்தில் இடம்பெறுவது ‘கபாலி’ படத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் ஏசியா நிறுவனத்தின் அனைத்து விமானங்களிலும் ‘கபாலி’ ஜொலிப்பதால் இந்த படத்தின் புரமோஷன் வானம் வரை பரவியுள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு புதுமையாக தற்போது சிட்டி வங்கி கிரெடிட் கார்டிலும் புரமொஷன் செய்யப்பட்டு வருகிறது. சிட்டி வங்கியில் புதியதாக பிளாட்டினம் கிரெடிட் கார்டு பெறுபவர்களுக்கு கபாலி ரஜினியின் ஸ்டில்லுடன் கூடிய கிரெடிட் கார்டு கிடைக்கும். இந்த புதுமையான புரமோஷன் இதுவரை எந்த படத்திற்கு செய்தது கிடையாது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply