shadow

‘கபாலி’ அஞ்சல் உறை. இந்திய அஞ்சல் துறையின் அதிரடி

kabaliiசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை இந்தியாவில் முன்னணியில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் கபாலி படத்துடன் டை-அப் செய்து கொண்டு புரமோஷன் செய்து வரும் நிலையில் முதன்முதலாக மத்திய அரசின் அஞ்சல்துறையும் தற்போது இணைந்துள்ளது.

கர்நாடக அஞ்சல் வட்டம் மற்றும் சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் ஆகியவை இணைந்து கபாலி திரைப்படத்தின் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன.

இதற்காக, சென்னை, பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை, பெங்களூரு அஞ்சல்தலை சேமிப்பு மையங்களிலும் கபாலி சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சல் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply