shadow

அஜித் பிறந்த நாளில் ரிலீஸாகும் ரஜினியின் ‘கபாலி’
kabali
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்த தினம் தொழிலாளர் தினம் மட்டுமின்றி தல அஜித்தின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் விஜய் நடித்த ‘தெறி’ படம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறை தினமான தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ‘தெறி’ படம் ரிலீஸாகவுள்ளதால் இந்த படத்தின் ஒப்பனிங் பிரமாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து தாணு தரப்பில் இருந்து விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Leave a Reply