ரஜினியின் ‘கபாலி’: முதல்முறையாக ஹவாய் தீவில் வெளியாகும் தமிழ்ப்படம்

kabaliசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் இதுவரை வெளிவராத உலகின் பல பகுதிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் அமெரிக்க, கனடா ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள சினிகேலக்ஸி தனது டுவிட்டரில் முதன்முறையாக ‘கபாலி’ படத்தை அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஹவாய் தீவில் எந்த தென்னிந்திய படம் வெளியானது இல்லை என்ற நிலையில் தற்போது முதல்முறையாக அங்குள்ள Regal Dole Cannery என்ற திரையங்கில் ‘கபாலி’ படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த திரையரங்கில் ‘கபாலி’ படத்தின் டிக்கெட்டுக்கள் முன்பதிவு தொடங்கி முடிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் என்ற மொழி இருப்பது கூட தெரியாத அந்த குட்டித்தீவில் தமிழ்ப்படம் ஒன்று ரிலீஸ் ஆகிறது என்றால் இந்த அதிசயம் ரஜினி படத்திற்கு மட்டும்தான் நடக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *