shadow

மேலும் 3 நாடுகளில் ‘கபாலி’ ரிலீஸ்

kabali4சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி மூன்று வாரங்களில் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.500 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது மேலும் மூன்று நாடுகளில் இந்தப் படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கபாலி’ திரைப்படம் முதன்முதலாக ‘மலாய்’ மொழியில் டப் செய்யப்பட்ட படம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் மலாய் மொழி பதிப்பு வரும் 26ஆம் தேதி முதல் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மலாய் மொழி பதிப்பு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் மூன்று நாடுகளில் ரிலீஸ் ஆகவுள்ளதால் இந்த படத்தின் மொத்த வசூல் புதிய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11.06 கோடி வசூல் செய்துள்ளது,. விஜய்யின் தெறி’ சென்னையில் ரூ.11.80 கோடி வசூல் செய்து இன்னும் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply