shadow

‘கபாலி’யின் அசைக்க முடியாத ‘சென்னை வசூல்

kabali4உலகம் முழுவதும் கடந்த 22ஆம் தேதி வெளியான ‘கபாலி’ திரைப்படம் வசூல் மழையில் நனைந்து வரும் நிலையில் சென்னையில் இந்த படம் புதிய சாதனையை செய்துள்ளது. இந்த சாதனையை இனிவரும் ரஜினியின் ‘2.0’ படம் கூட முறியடிக்குமா? என்பது சந்தேகமே என விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர்.

சென்னையில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை விஜய்யின் ‘தெறி’ படம்தான் கையில் வைத்துள்ளது. இந்த படம் 100 நாட்களில் சென்னையில் ரூ.11.90 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் ரஜினியின் ‘கபாலி படமோ வெறும் பத்தே நாட்களில் ரூ.9,14,86,010 வசூல் செய்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் ‘தெறி’யின் 100 நாள் வசூலை ‘கபாலி’ முறியடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களில் மட்டும் ரூ.2,19,22,898 வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2வது வார இறுதியில் ரூ.2 கோடிக்கும் மேல் சென்னையில் வசூல் செய்த முதல் படம் ‘கபாலி’ என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply