shadow

ஜூன் 10ஆம் தேதி ‘கபாலி’ இசை வெளியீடு
kabali  6
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘கபாலி’ டத்தின் டீசர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.  

கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 10ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் தமிழக, இந்திய மற்றும் உலகளாவிய ரிலீச் உரிமை குறித்த வியாபாரம் இசை வெளியீட்டுக்கு பின் தொடங்கும் என்றும் தாணு கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள ‘கபாலி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

Leave a Reply