shadow

‘தெறி’யுடன் கனெக்ஷன் ஆனது ‘கபாலி’

இளையதளபதி விஜய் நtheri-kabaliடித்த ‘தெறி’ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் பாடல்கள் உரிமையையும் இதே நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது.

இதே நிறுவனம் ரஜினியின் முந்தைய படமான ‘எந்திரன்’, தாணுவின் முந்தைய படமான ‘தெறி’, கணிதன் ஆகிய படங்களின் உரிமைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பத்து படங்களின் உரிமையையும் இதே நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள ‘கபாலி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 10ஆம் தேதி ‘கபாலி’ இசை வெளியீடு

Leave a Reply