shadow

ரஜினி-ரஞ்சித்-தனுஷ் இணையும் ‘கபாலி 2’

kabali2ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒரு படம் எடுத்து அதை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஆசையை இயக்குனர் ரஞ்சித் கபாலி படம் மூலம் நிறைவேற்றி கொண்டார். ரஜினியின் பாப்புலாரிட்டி இதற்கு நன்கு உதவியது.

இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒரு தலைவரை குறிப்பிடுகிறது என பலருக்கு புரிந்தாலும், ரஜினியின் இமேஜ் காரணமாக இதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் ரஜினியுடன் இணைகிறார் ரஞ்சித். இந்த படம் ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ‘கபாலி’ பட்ஜெட்டை பொறுத்தவரையில் ரஜினியின் சம்பளத்தை கழித்துவிட்டால் ஒன்றுமே இல்லை என்றுதான் தோணும். அதேபோல் மாமனாரின் சம்பளத்தை தவிர தனுஷூக்கு பெரிய செலவு இந்த படத்தில் இருக்காது என்றே கருதப்படுகிறது.

Leave a Reply