shadow

‘காற்று வெளியிடை’ படத்தின் சென்சார் தகவல்

கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடிப்பில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் ‘காற்று வெளியிடை’ இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் ஏப்ரல் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யூ’ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி படக்குழுவினர்களுக்கு சென்சார் அதிகாரிகளின் பாராட்டுக்களும் கிடைத்துள்ளதாம்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகிவிட்ட இந்த படத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Leave a Reply