shadow

இணையத்தில் லீக் ஆன 14 வினாடி காலா’ காட்சிகள்: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஷங்கரின் ‘2.0’ படத்தை முந்தி வரும் ஏப்ரல் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் 14 நொடிகள் சண்டைக்காட்சி ஒன்று வாட்ஸ் அப்பில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தன்னை அடிக்க வரும் வில்லன் நடிகர் ஒருவரை ரஜினிகாந்த் உதைப்பது போல் உள்ள இந்த காட்சி லீக் ஆனது எப்படி என்று படக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். படக்குழுவினர்களில் இருக்கும் ஒருவர்தான் இந்த வீடியோவை லீக் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply