shadow

‘காலா’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது? பா.ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ‘காலா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறித்து சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படும் என்று இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

‘காலா’ டைட்டில் குறித்து சற்று முன்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், ‘நெல்லை பகுதியில் உள்ள பொதுமக்கள் எமனை ‘காலா’ சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை சொல்வது தான் “காலா’ படத்தின் கதை. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 28ம் தேதி தொடங்கப்பட உள்ளது. மும்பை மற்றும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மே 28ம் தேதி தொடங்கப்பட உள்ளதாகவும், மும்பை மற்றும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்த ரஞ்சித் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply