shadow

இன்று முதல் தொடங்குகிறது ‘காலா’ டப்பிங்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ மற்றும் ‘காலா’ ஆகிய இரண்டு படங்கள் வரும் 2018ஆம் ஆண்டு வெளியாகவுள்ளதால் ரஜினி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கின்றது

இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தொடங்கியது. KNACK டப்பிங் ஸ்டுடியோவில் எளிய பூஜையுடன் தொடங்கிய இந்த டப்பிங் பணியில் காலா படத்தில் நடித்த நட்சத்திரங்கள் டப்பிங் பேசினர்

இந்த நிலையில் வரும் 31ஆம் தேதி வரை ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருப்பதால் புத்தாண்டுக்கு பின்னர் அவர் டப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply