shadow

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் தீபக் மிஸ்ரா

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக 63 வயது தீபக் மிஸ்ரா இன்று காலை பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து ஒரு சிறுகுறிப்பு:

1. 1953ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர்.

2. 1977ஆம் ஆண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.

3. 1996ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி ஒடிசா ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

4. 2009ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23ஆம் தேதி பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆனார்.

5. 2010ஆம் ஆண்டு, மே மாதம் 24ஆம் தேதி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

6. 2011ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

மும்பை வெடிகுண்டு வழக்கு உள்பட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வுகளில் தீபக் மிஸ்ரா அவர்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply