jurassic worldகார் விபத்தில் அகால மரணம் அடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் நடித்த கடைசி திரைப்படமான ‘பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 திரைப்படம் ரிலீஸான 17 நாட்களில் ஒரு பில்லியன் வசூல் செய்து சாதனை புரிந்தது. ஆனால் அந்த சாதனையை கடந்த வாரம் வெளிவந்த ஜூராசிக் வேர்ல்ட்’ திரைப்படம் முறியடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ரிலீஸான வெறும் 13 நாட்களில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஜூராசி வேர்ல்ட் என்ற இந்த திரைப்படம் 150 மில்லியன் அமெரிக்க டாலரில் தயாரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 17 நாட்களிலேயே சுமார் 850 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் பெற்றுள்ள இந்த திரைப்படம் இன்னும் அதிக வசூலுடன் பெரும்பாலான நாடுகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த படம் ஜப்பான் போன்ற ஒருசில நாடுகளில் விரைவில் வெளியாகவுள்ளது என்றும், அதன்பின்னர் இந்த படத்தின் வசூல் இன்னும் பல சாதனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *