Chennai Today News

ஜூனியர் உலக கோப்பை – இந்தியா தோல்வி

ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தென் கொரியாவுடன் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்த இந்தியா கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

டெல்லி, தயான் சந்த் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பரபரப்பான இப்போட்டியில், இடைவேளையின்போது இந்தியா 21 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் 31 என முன்னிலை பெற்றும், கடைசி கட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்தியா சார்பில் குர்ஜிந்தர் 2 கோல், மன்தீப் ஒரு கோல் அடித்தனர். கொரியா சார்பில் யூ சியூங்ஜு ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய கனவை தகர்த்தார்.சி பிரிவில் நெதர்லாந்து 9 புள்ளிகளுடன் (3 வெற்றி) முதலிடம் பிடிக்க, கொரியா அதிக கோல் அடிப்படையில் இந்தியாவை முந்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!