shadow

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஜூலி: சதியா விதியா?

பிக்பாஸ் பங்கேற்பாளர்களே அதிக வெறுப்பை சம்பாதித்த ஜூலி, எவிக்சனில் மிகக்குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார். ஆனால் இன்று முதல் மீண்டும் ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் யார் இருக்க கூடாது என்று வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்ட ஒரு நபர், மீண்டும் உள்ளே வருவது ஓட்டு போட்டவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

ஏற்கனவே ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் நற்பெயரை இழந்து வரும் பிக்பாஸ், தற்போது தவறான நபரை மீண்டும் உள்ளே அனுப்பி நீக்கமுடியாத களங்கத்தை ஏற்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் கருத்துக்கள் குவிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *