shadow

அரியலூர் அனிதா வேடத்தில் ஜூலி: நெட்டிசன்கள் புலம்பல்

நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று தயாராகவுள்ளது. ப்ளஸ் 2 தேர்வில் கடுமையாக உழைத்து 1176 மதிப்பெண்கள் பெற்றும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து நீட் குறித்த விழிப்புணர்வை தனது உயிரை போக்கி மக்களிடமும், மாணவர்களிடமும் ஏற்படுத்தியவர் அனிதா

அத்தகையை தியாகி வேடத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளாது. பிக்பாஸ் ஒளிபரப்பானபோது, அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு நபராக ஜூலி இருந்தார். அவர் போட்டியில் இருந்து வெளியே வந்தபோது அவருடைய முகத்தை கூட வெளியே காட்ட முடியவில்லை

அந்த அளவுக்கு மக்களிடையே வெறுப்பை சம்பாதித்த ஒருவர் தியாகி அனிதா கேரக்டரில் நடிப்பதா? என நெட்டிசன்கள் டுவிட்டரில் புலம்பி தவித்து வருகின்றனர். இந்த புலம்பலுக்கு செவிகொடுத்து இந்த படத்தின் குழுவினர் ஜூலியை மாற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply