shadow

முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஜூஸ்கள்

27-1380267371-6-orangejuice-300x225

கேரட் ஜூஸ் : கேரட்டில் கூந்தலின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஜூஸை தலைக்கு தடவுவதை விட, குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஸ்கால்ப்பில் போதிய அளவில் எண்ணெயை சுரக்கச் செய்யும்

வெங்காயச் சாறு : வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இவை கொலாஜன் திசுக்களை அதிகம் உற்பத்தி செய்யக்கூடியது. ஆகவே வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு:  உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், அது கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் கூந்தல் மெலிதாவதை தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது.
நெல்லிக்காய் சாறு : நெல்லிக்காய் முடியின் வலிமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய தன்மை கொண்டவை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்க் சி அதிகம் உள்ளது. இவை கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, அதன் கருமை நிறத்தை அதிகரிக்கும். அதற்கு இந்த நெல்லிக்காய் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து அலச வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ் :  ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், இது கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தப் பொருளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மயிர்கால்களில் எந்த ஒரு பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது.

Leave a Reply