shadow

சல்மான்கான் வழக்கை விசாரணை செய்த நீதிபதி திடீர் மாற்றம்: ஜாமீன் காலதாமதமாகுமா?

அபூர்வ வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் 5 வருட சிறைத்தண்டனை பெற்று ஜோத்பூர் சிறையில் இருக்கும் சல்மான்கானின் மேல்முறையீட்டு வழக்கு மற்றும் ஜாமீன் மனுதாக்கல் செய்த வழக்கு ஆகியவை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதில் சல்மான்கான் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷியும் ஓருவர் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் ஜோத்பூரில் இருந்து சிரோக் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே வேறு நீதிபதி பொறுப்பேற்கும் வரை சல்மான்கான் ஜாமீன் மனு விசாரணைக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்னும் ஒருசில நாட்கள் சல்மான்கான் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply