shadow

சென்னை ஐகோர்ட்டை பாதுகாக்கும் மத்திய பாதுகாப்பு படைக்கு நீதிபதி எதிர்ப்பு
high court
சென்னை ஐகோர்ட்டின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வழக்கறிஞர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஒரு நீதிபதியே இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி எஸ்.கர்ணன் இன்று ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “தினமும் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் உடலை தொட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வது அவர்களுடைய தன்மானத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.\

இது வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றத்திற்கும், இடையே அதிக இடைவெளியை ஏற்படுத்தும். இன்றைய வழக்கறிஞர்கள் நாளைய நீதிபதிகள். எனவே அவர்களுக்கான மரியாதையை தரும் போது தான், நீதிமன்றத்தின் மாண்பு உயரும். எனவே வழக்கறிஞர்கள் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காட்டி வரும் கடும் கெடுபிடிகளை தளர்த்த ஆவன செய்ய வேண்டும் என அவர் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply